பல்வேறு அரசியல் கட்சி அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேமுதிக அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் துணைப் பொதுச் செய லாளர் வி.பி.துரைசாமி கொடி ஏற்றினார். பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி தேசியக் கொடியை ஏற்றினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் விடுதலைப் போராட்ட வீரரும் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் கொடியை ஏற்றினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்திய ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் கொடியை ஏற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் தலைவர் கே.எம்.காதர் மொஹிதீன் கொடி ஏற்றினர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழக தலைமையகத்தில் மாநில துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.ஹனிபா கொடியை ஏற்றி வைத்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் தேசிய கொடியை ஏற்றினார்.