தமிழகம்

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியை முற்றிலுமாக தடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

செய்திப்பிரிவு

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி யை முற்றிலுமாக தடுக்கவும், தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை களை தீவிரமாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை சார் பில், தென்மேற்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த கூட்டத்தில் துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:

கொசுவால் பரவும் வைரஸ் காய்ச்சல், தொற்றுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியை முற்றிலுமாக தடுத்து, காய்ச்சல் மூலம் இறப்பு என்ற நிலையே ஏற்படக்கூடாது. மருத்துவர்கள், துறை அலுவலர்கள் மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்.

காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் தாங்களாகவே மருந்துக் கடையில் மருந்து வாங்கி உட்கொள்வதையும், அங்கீகாரம் பெறாத போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுவதையும் முற்றிலு மாக தவிர்க்க வேண்டும். அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங் கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை களுக்கு சென்று முறை யான சிகிச்சை பெற வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உட்பட தொற்று நோய்களை தடுக்க நடவ டிக்கை எடுக்கவும், கண்காணிக் கவும், ஆய்வு மேற்கொள்ளவும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர் கள், பூச்சியியல் வல்லுநர்களை ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமித்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட் டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை அன்றா டம் கண்காணித்து, கொசு ஒழிப்பு பணியாளர்களின் பணிகளை தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT