தமிழகம்

விமானத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்: ராமநாதபுரம் இளைஞர் திருச்சியில் கைது

செய்திப்பிரிவு

விமானத்தில் மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2.5 கோடி மதிப்பிலான போதைப்பொருள் திருச்சி விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்குச் செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்தவர்களின் உடைமைகளை, விமானநிலைய சுங்கப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதுத்தெருவைச் சேர்ந்த ஹமீது அப்துல்காதர் மகன் முகமது பசுல் ஹக் (32) கொண்டு வந்த டிராவல் பேக்கின் உட்பகுதியில் 4.050 கிலோ எடையுள்ள போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, முகமது பசுல் ஹக்கை சுங்கத் துறையினர் கைது செய் தனர். இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொரு ளின் இந்திய மதிப்பு ரூ.2.43 கோடி எனவும், சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி எனவும் சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.

இவர் வைத்திருந்த டிராவல் பேக்கின் அடிப் பகுதியில் ரெக்ஸின் துணியா லான உறைக்குள், கார்பன் காகிதங் களை மூன்று அடுக்காக வைத்து, அதற்குள் போதைப்பொருளை மறைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT