இலங்கை சிறைகளில் வாடும் 76 தமிழக மீனவர்களையும், அவர்களுக்கு சொந்தமான 61 படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
வங்கக் கடலில் மீன் பிடிப்பதற் காக சென்ற நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக சிறை பிடித்துச் சென்றுள்ளனர். அவர்களை சிறையில் அடைத்திருக் கின்றனர். உண்மையில் அவர்கள் இந்திய கடல் எல்லைக்குள்தான் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அண்மைக்காலமாகவே இந்திய எல்லைக்குள் இலங்கை கடற் படை அத்துமீறி நுழைந்து மீனவர்களை கைது செய்வது அதிகரித்திருக்கிறது.
தமிழக மீனவர்களுக்கு சொந்த மான 57 படகுகளை பறிமுதல் செய்து வைத்துள்ள இலங்கை அரசு, அவற்றை திருப்பித் தர மறுத்து வருகிறது. தமிழத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு எதிராக இத்த கைய அட்டூழியங்கள் தொடர அனு மதிப்பது மிகவும் ஆபத்தானது. இனிவரும் காலங்களில் தமிழக மீன வர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க, பன்னாட்டு சட்டங்களின்படி வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை இலங்கை - இந்திய அரசுகள் செய்து கொள்ள வேண்டும்.
அதற்கு முன்பாக இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரையும், மீனவர் களுக்கு சொந்தமான 61 படகு களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத் தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.