தமிழகம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி இல்லை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பிளாஸ்டிக் அரசி என்பதே இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை. மக்களிடத்தில் பிளாஸ்டிக் அரிசி குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.

பிளாஸ்டிக் அரிசி குறித்து ஏதேனும் தகவல் வந்தால் உடனே பரிசோதனை செய்யத் தயாராக உள்ளோம். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அரிசி மாதிரிகளை சேகரித்தனர். தமிழகத்தில் உள்ள 6 ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதிக்கப்பட்டது. அதில், எங்கும் பிளாஸ்டிக் அரிசி உள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இருப்பினும் எங்கு பிளாஸ்டிக் அரிசி இருப்பதாக தகவல் வந்தாலும் அதை பரிசோதனை செய்ய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உள்ளனர்'' என்றார்.

SCROLL FOR NEXT