தமிழகம்

சென்னை கொருக்குப்பேட்டையில் பயங்கரம்: திமுக மகளிரணி நிர்வாகி கொலை - வீட்டு வாசலில் வைத்து வெட்டிய நபர் கைது

செய்திப்பிரிவு

கொருக்குப்பேட்டையில் திமுக மகளிர் அணி நிர்வாகியை வீட்டு வாசலில் வைத்து கழுத்தை வெட்டி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை கொருக்குப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தோட்டத்தை சேர்ந்தவர் சேகர் (48). இவரது மனைவி லட்சுமி (45). ஆர்.கே.நகர் தொகுதி 42-வது வட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி. அதே பகுதியில் பூ வியாபாரம் செய்தார். வட்டிக்கும் பணம் கொடுத்து வந் துள்ளார். தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் தொந்தி கணேஷ்(27) என்பவர் லட்சுமியிடம் அடிக்கடி பணம் கடன் வாங்குவார். கணேசுக்கும் லட்சுமியின் தோழி ஓருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். லட்சுமியிடம் அடிக்கடி பணத்தை கடன் வாங் கிய கணேஷ், அந்த பணத்தை லட்சுமியின் தோழிக்கு செலவழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட் களாக லட்சுமியின் தோழி, கணேஷ் உடனான தொடர்பை துண்டித்து விட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் நேற்று காலை 11.45 மணியளவில் லட்சுமியின் வீட்டுக்குச் சென்று அவரது தோழியின் இருப்பிடம் குறித்து தகவல் கேட்டு மிரட்டியுள் ளார். லட்சுமி தகவல் அளிக்க மறுக் கவே கணேஷ், தான் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்து லட்சுமி யின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி யோடிவிட்டார். படுகாயமடைந்த லட்சுமியை அவரது தங்கை தேவி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு லட்சுமி இறந்துவிட்டார். இது தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கணேஷின் சொந்தஊர் ராஜ பாளையம். தண்டையார்பேட்டை யில் உள்ள ஜெயின் டியூப்ஸ் நிறுவனத்தில் தங்கியிருந்து ஓட்டு நராக வேலை செய்து வந்துள்ளார். லட்சுமியை கொலை செய்து விட்டு தனது சொந்த ஊரான ராஜபாளையத்திற்கு தப்பி ஓட முயற்சித்தபோது போலீஸார் அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT