தமிழகம்

தமிழக உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்

செய்திப்பிரிவு

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவ கங்கை, விருதுநகர், தேனி, திண் டுக்கல், மதுரை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், கடலூர், விழுப்புரம், தஞ் சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம், புதுக்கோட்டை, ராமநாத புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி யில் ஒரு சில இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில இடங்களில் மழையோ அல் லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT