தமிழகம்

தென் கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்துக்கு மழை இல்லை

செய்திப்பிரிவு

தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. எனினும் இதனால், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலின் தென் கிழக்கு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது தமிழகத்தின் கரைக்கு அருகில் இன்னும் நிலை கொள்ளவில்லை. எனவே, இதனால் தமிழகத்துக்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை இல்லை. அதன், பிறகு காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த திசையில் நகர்கிறது என்பதை பொறுத்து தமிழகத்துக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளதா என்று தெரியும்.

புதன்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் கன்னி யாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை யில் மட்டும் 3 செ.மீ. மழை பதிவாகியது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஆங்காங்கே இடி யுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பொதுவாக வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT