தமிழகம்

சென்னையில் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தல்

செய்திப்பிரிவு

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் குழந்தையைக் கடத்தியவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லியில் ஒரு விடுதியில் தங்கியிருந்த சரிதா(24) என்ற பெண்ணுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதிகாலை 1 மணியளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. குழந்தையை ஒரு பெண் எடுத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் சிலர் கூறினாலும், சிசிடிவி கேமரா வேலை செய்யாததால் குழந்தையைக் கடத்தியவரைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT