சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வேகமாக வீசுவதால், தரைக்காற்று வலுத்து காணப்படும். சில சமயங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் இருக்கக் கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் அதிக அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.