தமிழகம்

நொளம்பூர் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் உண்ணாவிரதம்

செய்திப்பிரிவு

நொளம்பூர் பகுதியில் உள்ள சாலையின் ஒரு பகுதி கடந்த ஏழு ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. அதோடு கழிவு நீர் தேங்கும் இடமாகவும் மாறி விட்டது. இப்பிரச்னையை தீர்க்க மாநகராட்சி இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, நொளம்பூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அம்பத்தூர், உழவர் சந்தை அருகே வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200- க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, நொளம்பூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.சுரேஷ் தெரிவித்ததாவது:

குண்டும் குழியுமான ராம் நகர் சாலையில் சென்ற பெண் கள் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட் டுள்ளது. அதோடு இச்சாலையில் பல நாட்களாக கழிவுநீர் ஓடுவதால் ஏற்பட்ட பள்ளத்தில் பள்ளி வாகனம் ஒன்று மாட்டிக்கொண்டது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள், மேயரிடம் முறை முறையிட்டும் பலனில்லை. எனவேதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இனியும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவிண்குமாரிடம், நொளம்பூர் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பிக் கொடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றார்.

சாலை வசதி, குடிநீர் பிரச்சினை தொடர்பாக சென்னை மாநகராட்சியைக் கண்டித்து நொளம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அம்பத்தூர் உழவர் சந்தை அருகில் வெள்ளிக் கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். படம்: இரா. நாகராஜன்

SCROLL FOR NEXT