தமிழகம்

தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனை: அரசியல் கட்சிகள் மீது தமிழிசை குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனைக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகிறார்கள், அரசியல் கட்சிகள்தான் இதை அரசியலாக்கி மக்களை குழப்பு கின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வெற்றிகரமாக சர்வதேச கயிறு கண்காட்சி நடந்து முடிந்துள்ளதற்கு கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் முக்கியக் காரணம். கயிறு, நார் பொருட்கள் என மட்டும் இல்லா மல், கயிறு நாரைக் கொண்டு 5 நட்சத்திர பயன்பாட்டுப் பொருட் களை தயாரித்து காட்சிப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்லப்பட் டுள் ளது என்றார்.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, ‘பாலாற்றில் தமிழக விவசாயி களுக்கு கிடைக்க வேண்டிய உரிமை முழுமையாக கிடைக்க வேண்டும். தபால் நிலையங்களில் கங்கை நீர் விற்பனைக்கு மக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். அரசியல் கட்சி கள்தான் சுய லாபத்துக்காக மக் களை குழப்புகின்றனர்’ என்றார்.

SCROLL FOR NEXT