திருப்பூர் மாநகராட்சியில் போட்டி யிடும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு முன்ன தாக, வேட்பாளர் அறிமுகக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டம் நிறைவடையும் தருவாயில், கட்சி அலுவலகத்துக் குள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் வந்தார்.
அப்போது, அங்கு வந்த 25-வது வார்டு அதிமுகவினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்த உமா மகேஸ்வரிக்கு ‘சீட்’ கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், 25-வது வார்டு கிளைச் செயலாளர் தங்க வேலுக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை என கூறி, அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோரை முற்றுகையிட்டனர்.
இதனால், இரு தரப்பிலும் வாக்கு வாதம் எழுந்தது. ‘கோரிக்கையை மனுவாக கொடுங்கள். தலைமைக்கு அனுப்புகிறேன்’ என எம்.எஸ்.எம்.ஆனந்தன் தெரி வித்தார். ஆனால், அவர்கள் சமா தானம் அடையவில்லை. இப்பிரச் சினை குறித்து முதல்வர் ஜெயலலி தாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், கோரிக்கை மனு அனுப்ப உள்ளதாக அதிமுக வினர் தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சியில் தேர் தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், வேட்பாளர் பட்டியலில் அதிருப்தி அடைந்த மற்றும் வாய்ப்பு கிடைக்காத கட்சியினர், புத்தூர் ஆபீசர்ஸ் காலனி பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, கட்சி அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட அதிமுக வினர், மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், அலுவலகத்துக்கு வந்தபோது, அவரது காரை சூழ்ந்தனர். இதனால், அமைச்சர் நடராஜன் காரிலிருந்து இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும், அதிருப்தி அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது. போலீஸாரும் அமைச்சரின் ஆதரவாளர்களும் அமைச்சரை மீட்டு, அழைத்துச் சென்றனர். கட்சி அலுவலக கதவு மூடப்பட்டு, போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.
பின்னர், அதிருப்தி அதிமுக வினரை வார்டு வாரியாக அழைத்த அமைச்சர் நடராஜன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த அதிருப்தி அதிமுகவினர் கூறும்போது, “எங்கள் கோரிக் கைகள் தொடர்பாக கட்சித் தலை மையிடம் தெரிவித்து, பிரச்சி னைக்கு தீர்வு காண்பதாக அமைச் சர் உறுதியளித்தார்” என்று கூறி விட்டு, அங்கிருந்து வெளியேறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் 4 மணி நேரம் பரபரப்பு நிலவியது.