ரூ.2.18 கோடி பெற்று மோசடி செய்ததாக வெளிநாடுவாழ் இந்தியர் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மற்றும் அவரது மனைவி ஜோதீஸ்வரி உட்பட 7 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.
போரூரை அடுத்த கெருகம் பாக்கத்தை சேர்ந்தவர் ஆதிநாராய ணன். இவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், "முன்னாள் எம்.பி. யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் என்ற சிவகுமாரும், அவரது ஆட்களும் என்னுடைய மருமகனிட மிருந்து ரூ.2 கோடியே 18 லட் சத்தை பெற்று மோசடி செய்துவிட் டனர். பணத்தை திரும்பத் தரும்படி பலமுறை கேட்டும் பலன் இல்லை. எனவே, பணத்தை திரும்ப பெற் றுத் தர வேண்டும். மோசடி செய்த ரித்தீஷ் மற்றும் அவரது கூட்டாளி கள் மீது நடவடிக்கை எடுக்கவேண் டும்” என்று குறிப்பிட்டிருந் தார்.
ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஆதிநாராயணன் இது குறித்து சென்னை உயர் நீதிமன் றத்தில் முறையிட்டார். வழக்கு விசாரணையின் போது, குற்றச் சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால், இந்தப் புகாரை கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி முடித்து வைத்துவிட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடி னார்.
இதை ஏற்காத நீதிபதி, முகாந் திரம் இல்லை என்று கூறி புகாரை முடித்துவைத்து போலீஸார் தாக் கல் செய்த அறிக்கையை ரத்து செய்தார். “ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட் டோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார். ஆனாலும், போலீஸார் விசாரணையை தொடங்கவில்லை என்று கூறப்படு கிறது.
இதைத் தொடர்ந்து ஆதிநாராய ணன், சென்னை காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, “4 வாரங்களுக்குள் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்தார்.
இந்நிலையில், நடிகர் ஜே.கே.ரித் தீஷ், அவரது மனைவி ஜோதீஸ் வரி உட்பட 7 பேர் மீதும் ஏமாற்று தல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.