தமிழகம்

மின் கட்டணத்தை உயர்த்தினால் ஆணையத்தை எதிர்த்து வழக்கு: தொழில் துறையினரின் முடிவால் வாரியத்துக்கு சிக்கல்

ஹெச்.ஷேக் மைதீன்

மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் கட்டண உயர்வை தாமாக அமல்படுத்தினால், அதை எதிர்த்து வழக்குத் தொடர தொழில்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக, சட்ட ரீதியான பல்வேறு கேள்வி களை ஒழுங்குமுறை ஆணையத் திடம் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முன் வராத நிலையில், மின்சார ஒழுங்குமுறை ஆணையமே தாமாக முன்வந்து இது பற்றி செப்டம்பர் 27ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. சென்னை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் மட்டும் இது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. தொழிற்துறையினர் மற்றும் நுகர்வோரிடமிருந்து, மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்து களைக் கடிதங்கள் வாயிலாகவும், ஒழுங்கு முறை ஆணையம் சேகரித் துள்ளது.

இந்நிலையில், கட்டண உயர்வு குறித்த ஒழுங்குமுறை ஆணைய உத்தரவை, வரும் நவம்பர் 15ம் தேதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளதாக, தொழிற்துறையினர் மத்தியில் தகவல் பரவியுள்ளது. வழக்கமாக நிதியாண்டில் உயர்த்தப்படும் மின் கட்டணத்தை இம்முறை அரை யாண்டுக் கணக்கு தொடங்கும் மாதத்தில் உயர்த்த முடிவு செய் யப்பட்டுள்ளது.

எனவே, கட்டண உயர்வு நடவடிக்கைகளில் குளறுபடி மற்றும் ஆண்டு வருவாய், செலவுக் கணக்கை மின் வாரியம் தாக்கலே செய்யாமல், தோராயக் கணக்கின் மூலம் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் போன்றவற்றில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் நுகர்வோர் பயன்பாட்டாளர்கள் சங்கம், மதுரை சிறு, குறு தொழில்கள் சங்கம், கோவை சிறு, குறு தொழில்கள் சங்கம், தமிழ்நாடு பொறியியல் தொழில்கள் சங்கம், தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள், ஒழுங்குமுறை ஆணையத் துக்கு கடிதங்களை அனுப்பி யுள்ளனர். அதில் கூறியிருப் பதாவது: கட்டண உயர்வு கோரி, மின்வாரியம் விண்ணப்பிக்காத நிலையில், ஆணையமே தன்னிச்சையாக கட்டண உயர்வு செய்ய முடியாது. முன்னாள் மின் வாரிய அதிகாரிகளே, ஆணையத் தில் தலைவராகவும், உறுப்பின ராகவும் நியமிக்கப்பட்டு அரசு வழிகாட்டுதலின் படி, ஆணையம் செயல்பட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

மின் வாரியத்தின் முன்னாள் அதிகாரியல்லாத, ஆணையத் தின் உறுப்பினர் நாகல்சாமி, கருத்துக் கேட்பு கூட்டத்தின்போது பேசுகையில் மின் வாரியம் வரவு, செலவுக் கணக்கு தாக்கல் செய்யாததால், மின்சார சட்டப் பிரிவு 142ன் படி, நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித் துள்ளார்.

நீதிமன்றம் போல் நடுநிலையாக செயல்பட வேண்டிய ஆணையம், தற்போது மின் வாரியத்தின் மற்றொரு பிரிவு போல் செயல்படுகிறது. மின் வாரியமும், ஆணையமும் இந்த விஷயத்தில் சட்ட விதிகளை மீறியுள்ளன. மின் வாரியம் நஷ்டத்தில் இயங்கும் நிலையில், முழுமையான விசாரணை நடத்தவும், மின் வாரிய செயல்பாடுகளை தனியான நிர்வாகங்களிடம் ஒப்படைக் கவும், பிரிவு 24ன் படி, ஆணை யத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நோட்டீசையும் ஆணையம் வழங்கவில்லை.

தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யக் கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டும், கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கப்படுகின்றன. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இதுகுறித்து, தொழிற்துறை யினரிடம் பேசிய போது, “மின் கட்டணத்தை நவம்பர் முதல் உயர்த்தி உத்தரவிட ஆணையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு உயர்த்தி னால் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம்” என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT