வங்கி மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்து சென்னை 11-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற்றுத்தர அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டவர்தான் சுகேஷ் சந்திரசேகர்.
இவர் மீது சென்னையில் ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது.
சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடி பண மோசை செய்ததாக அவர் மீது வழக்கு உள்ளது.இந்த வழக்கை சென்னை 11-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்தது.
இந்நிலையில் வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், வரும் ஜூன் மாதத்துக்குள் சுகேஷ் சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.