தமிழகம்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: தேர்வுகள் ஒருநாள் தள்ளிவைப்பு

செய்திப்பிரிவு

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் நாளை (சனிக்கிழமை) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் தமிழர்கள் மீதும், அவர்களின் வாக னங்கள் உள்ளிட்ட உடைமைகள் மீதும் தாக் குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகை யில் தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதை யொட்டி தமிழகத்தில் தனி யார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட் டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.நந்தகுமார் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து தமிழகத்தில் வெள்ளிக்கிழமை நடக்கும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்தும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தரவேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடக் கோரியும் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும்.

முழு அடைப்பு காரணமாக தனியார் வாகனங்கள் இயக்கப்படாததால் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் வருவது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை கருத்தில்கொண்டும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். தற்போது காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளிக்கிழமை நடக்க வேண்டிய தேர்வுகள் மறுநாள் (சனிக்கிழமை) நடத்தப்படும்.

இவ்வாறு நந்தகுமார் கூறினார்.

SCROLL FOR NEXT