தமிழகம்

நந்தனத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: 5 வாகனங்களுக்கு தகுதிச் சான்று மறுப்பு

செய்திப்பிரிவு

கே.கே.நகர் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் சார்பில் நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பள்ளி வாகனங்கள் நேற்று ஆய்வு செய்யப்பட்டன.

தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதை முன்னிட்டு கடந்த ஒரு வாரகாலமாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் வாகன ஆய்வா ளர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நந்தனத்தில் உள்ள அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நேற்று 37 பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங் களில் அவசரகால ஜன்னல், தரமான படி, தீயணைப்புக் கருவி, முதலுதவி, பிரேக் உட்பட 16 அம்சங்கள் சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது வேகக் கட்டுப்பாட்டு கருவி பழுது, அவசரக்கால கதவு இல்லாதது, படிக்கட்டு பழுது உள்ளிட்ட குறைபாடுகள் காரணமாக 5 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று (எப்.சி.) மறுக்கப்பட்டது. இந்த ஆய்வில் கே.கே.நகர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜி.அசோக்குமார், வாகன ஆய்வாளர்கள் எஸ்.தரன், எம்.விஜயகுமார், எம்.பூங்குழலி, கிண்டி தாசில்தார் ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT