தமிழகம்

கலாம் நினைவு தினத்தையொட்டி 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம்: பேரன் ஷேக் சலீம் தகவல்

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் முத லாவது நினைவு தினத்தையொட்டி 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவரது பேரன் ஷேக் சலீம் கூறினார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:

‘மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுக்கு செயல் வடிவம் கொடுக் கவும், அவர் விட்டுச் சென்ற பணியை தொடரவும் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.

இந்த அறக்கட்டளை மூலமாக, வரும் ஜூலை 27-ம் தேதி, அப்துல் கலாமின் முதலாவது நினைவு தினத்தையொட்டி ‘அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பின் சார்பில் மணல், பூசணிக்காய்களைக் கொண்டு கலாமின் உருவங்கள் 100 இடங்களில் அமைக்கப்பட உள்ளன. கலாம் நினைவு தின ஜோதி, சென்னையில் இருந்து இன்று (திங்கள்கிழமை) புறப்பட்டு பைக் சாகச வீரர் மூலம் ராமேசு வரத்துக்கு கொண்டு செல்லப்படு கிறது. நினைவு நாளான 27-ம் தேதி யன்று ஜோதி ராமேசுவரம் வந்தடை கிறது. ராமேசுவரத்தில் நடக்கும் கலாம் நினைவு தின நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

இதில் கலந்துகொள்ளும் அனை வருக்கும் மரக்கன்றுகள் வழங்கப் படும். அதை அவர்கள் விரும்பிய இடத்தில் நட ஏற்பாடு செய்து தரப்படும். மொத்தம் 1 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

          
SCROLL FOR NEXT