தமிழகம்

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது: மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

செய்திப்பிரிவு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று (வியாழக் கிழமை) வெளியாகிறது. தேர் வெழுதிய மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன் லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

கடந்த ஜூன், ஜூலை மாதங் களில் நடைபெற்ற பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் (தத்கால் தேர்வர் கள் உட்பட) தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாகவே 21-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அப்போது தங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்துக்கு ஜூலை 25 முதல் 27-ம் தேதி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் பெற மொழித்தாள் மற்றும் ஆங்கிலத்துக்கு தலா ரூ.550, மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.275 கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதேபோல், மறுகூட்டலுக்கு மொழித்தாள், ஆங்கிலம், உயிரியல் ஆகிய வற்றுக்கு தலா ரூ.305, ஏனைய பாடங்களுக்கு தலா ரூ.205 கட்ட வேண்டும்.

விண்ணப்பித்த பின்னர் வழங் கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப் பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண் மூலமாகவே விடைத்தாள் நகலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும். மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்துகொள்ள முடியும். எனவே, விண்ணப்ப எண்ணை பத்திரப்படுத்திக் வைத்துக்கொள்ளுமாறு தேர்வர் கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SCROLL FOR NEXT