தமிழ்நாடு நில ஆர்ஜித சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த கே.வெங்கட்ராமன் மனு தாக்கல் செய்துள்ளார்.
"செய்யாறு வட்டம் மங்கள் கிராமத்தில் உள்ள எனது நிலம் உள்பட அங்குள்ளவர்களின் நிலத்தை சிப்காட் தொழிற்சாலைக் காக ஆர்ஜிதம் செய்ய நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு நில ஆர்ஜித சட்டத் தின்படி இந்த நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
வெளிப்படைத் தன்மையுடன் கூடிய நில ஆர்ஜிதம் மற்றும் நியாய மான இழப்பீடு பெறுவதற்கான மத்திய அரசின் 2013-ம் ஆண்டு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசின் நில ஆர்ஜித சட்டத்தின்படி நில ஆர்ஜித நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியாது. ஆகவே, தமிழ்நாடு அரசின் நில ஆர்ஜித சட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசார ணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.