இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் ஆகி யோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மற்றும் காரைக்கால் பகுதிகளில் 6 ஆயிரம் அடிக்கு ஆழ்துளையிட்டு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டுவிடும். இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழக அரசு மத்திய அரசை கைவிட வலியுறுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28-ம் தேதி காலை 10 மணியளவில் ஆலங் குடியில், மக்கள் நலக் கூட்டி யக்த்தின் தலைவர்கள் ஜி.ராம கிருஷ்ணன், இரா.முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
மதிமுக ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து நெடுவாசலில் வரும் 28-ம் தேதி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.