சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட் டது. கோட்டையில் அனைத்து வாயில் களும் மூடப்பட்டு போலீஸார் குவிக்கப் பட்டிருந்தனர். கடுமையான சோதனகளுக் குப் பின்னரே தலைமைச் செயலக ஊழியர் களும் பொதுமக்களும் அனுமதிக்கப் பட்டனர்.
சட்டப்பேரவையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். திமுக வைச் சேர்ந்த இடைநீக்கம் செய்யப்பட்ட 79 எம்எல்ஏக்கள் கடந்த வெள்ளியன்று போட்டி சட்டப்பேரவை கூட்டத்தை கோட்டை வளாகத்தில் நடத்தியதால், பர பரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, இன்றும் அவர்கள் உள்ளே வந்துவிடக் கூடாது என்பதற்காக, 1,500-க்கும் மேற்பட்ட போலீ ஸார் குவிக்கப்பட்டனர். எம்எல்ஏக்கள், பத்திரிகையாளர்கள் வாகனங்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
புனித ஜார்ஜ் கோட்டை பின்புறம் அமைந்துள்ள, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி வரும் தலைமைச் செயலக ஊழியர்களில், நடந்து செல்வோர் மட்டும் அனுமதிக் கப்பட்டனர். அவர்களும் 2 இடங்களில் கடும் சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வேறு வழியின்றி ஆட்டோவில் ஏறி, முன்வாயிலுக்கு சென்று, அதன் வழியாக, பல்வேறு சோதனைகளைக் கடந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
பத்திரிகையாளர்கள் வாகனங் களை கோட்டை எதிரில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் உள்ளே அனு மதிக்கப்படவில்லை. சட்டப்பேரவை கட்டிடத்தின் அனைத்து வாயில்களிலும், பேரவைக்காவலர்கள், சீருடை மற்றும் சீருடை அல்லாத சாதாரண உடையில் நிறுத்தப்பட்டு, வருபவர்களை விசாரித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். இதனால், தலைமைச் செயலக ஊழியர்கள், தலைமைச் செயலகத்துக்கு மனு அளிக்க வந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் சிரமத்துக்குள்ளாகினர்.
இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்தார். பேரவை நிகழ்ச்சி கள் முடிந்த பின்னரும், சில பகுதிகளில் அடைக்கப்பட்ட வாயில்கள் திறக்கப்படாததால், அமைச்சர்களும் வேறு வழியின்றி சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.