முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்ட முருகனின் அறை யில் கடந்த மார்ச் 25-ம் தேதி 2 செல்போன், 3 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜே.எம் 1-வது மாஜிஸ் திரேட் அலீசியா முன்னிலையில் நடந்து வருகிறது. வழக்கின் விசார ணைக்காக, 4-வது முறையாக முருகன் நேற்று ஆஜர்படுத்தப்பட் டார். அப்போது, முருகன் தரப்பில் 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டன. பின்னர், வழக்கை வரும் 25-ம் தேதிக்கு மாஜிஸ்திரேட் தள்ளிவைத் தார்.
முருகன் தாக்கல் செய்த மனு விவரங்கள் குறித்து போலீஸார் கூறும்போது, ‘‘இந்த வழக்கு தொடர்பாக முருகனிடம் கடந்த 18-ம் தேதி வழங்கப்பட்ட 20 பக்க குற்றப்பத்திரிகை நகலில் சிறை நிர்வாகம், காவல்துறை மற்றும் நீதிமன்றத்தின் முத்திரை இல்லை என்று கூறி, சான்றளிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை நகல் வேண்டும் என கோரியிருந்தார்.
அதிகாரிகள் மற்றும் சிறைக் காவலர்களின் பணி விவரம், கைதிகளை கையாளும் முறை, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட் டுள்ளார்.
மேலும், இந்த வழக்கில் தானே வாதாடபோவதாகத் தெரி வித்துள்ளார். வழக்கை அனைவர் முன்னிலையிலும் நடத்த வேண் டும். அதுகுறித்து செய்தியாக வெளி வருவதுடன் மற்றவர்கள் வழக்கின் விசாரணையை குறிப்பெடுப்பதை தடுக்கக் கூடாது என கேட்டுள்ளார்.
இந்த 4 மனுக்களில் சிறை அதிகாரிகளின் பணி விவரங்கள் குறித்த மனுவை தள்ளுபடி செய்தார். பின்னர், நீதிமன்ற முத்திரையுடன் கூடிய 20 பக்க குற்றப்பத்திரிகை நகல் முருகனுக்கு வழங்கப்பட்டது. மற்ற 2 மனுக்கள் மீது விரைவில் மாஜிஸ்திரேட் முடிவு தெரிவிப்பார்’’ என்றனர்.