தமிழகம்

சென்னையில் கொசுவை ஒழிக்க கம்பூசியா மீன்கள்: மாநகராட்சி திட்டம் இன்று துவக்கம்

செய்திப்பிரிவு

சென்னையில் கொசுத் தொல் லையை ஒழிக்கும் வகையில் கம்பூசியா மீன்களை நீர்நிலை களில் விட மாநகராட்சி முடிவு செய் துள்ளது. முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 660 நீர்நிலைகளில் கம்பூ சியா மீன்கள் விடப்படுகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தீவிர பணிகள்

கால்வாய்கள், திறந்தவெளிகள், வீட்டு மாடி, திறந்து கிடக்கும் தொட்டிகள், டயர்கள் ஆகியவற்றில் தேங்கிக் கிடக்கும் நீரால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகியுள்ளது. இதைத் தடுக்க கொசுப் புழு மருந்து தெளித்தல், புகை பரப்புதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர் நிலைகளில் உள்ள கொசுக் களை ஒழிக்க தற்போது கொசுக் களின் முட்டை மற்றும் கொசுப் புழுக்களை உணவாகக் கொள்ளும் கம்பூசியா மீன்கள் விடப்பட உள்ளன. முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு 660 நீர்நிலைகளில் இந்த மீன்கள் விடப்படுகின்றன. இப்பணியை கோடம்பாக்கம் காரணீஸ்வரர் கோயில் குளத்தில் மேயர் சைதை துரைசாமி 23-ம் தேதி துவக்கிவைக்கிறார்.

SCROLL FOR NEXT