தமிழகம்

கோமாரி நோயால் மாடுகளை இழந்தோர்க்கு இழப்பீடு - ராமதாஸ் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கோமாரி நோயால் உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட் டங்களில் கோமாரி நோய் பரவி வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

தொடக்கத்தில் நாகை மாவட்டத்தில் மட்டும் காணப்பட்ட கோமாரி நோய் இப்போது தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், ஈரோடு என பெரும்பாலான மாவட்டங்களுக்கும் பரவி யிருக்கிறது. இதனால் பல மாவட்டங்களில் கால்நடை சந்தைகளையே மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் கிராமங்களில் சமூக, பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்படும். எனவே, கோமாரி மற்றும் தொண்டை அடைப்பான் நோய்களைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கர்நாடகத்தில் கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளின் உரிமை யாளர்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழகத்திலும் உயிரிழந்த மாடுகளின் உரிமையாளர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும், ஆடுகளின் உரிமை யாளர்களுக்கு ரூ.10 ஆயிரமும் அரசு இழப்பீடு தர வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT