தமிழகம்

பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியன் வங்கியின் புதிய செயலி அறிமுகம்

செய்திப்பிரிவு

இந்தியன் வங்கி பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக புதிய செயலியை அறிமுகப்படுத்தி யுள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு வசதியாக ‘இந்தியன் வங்கி யுபிஐ ஆப்’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் பிறருக்கு பணம் அனுப்ப முடிவதோடு, பிறரிடமிருந்து பணம் பெறவும் முடியும்.

இதேபோல் கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் ‘உங்கள் போன் உங்கள் வங்கி’ என்ற சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்டர்நெட் இணைப் பின்றி செல்போன் மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

மேலும், வீட்டுக் கடன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் களின் விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதற்காக இந்தியன் வங்கியில் நடைபெற்ற விழாவில் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மகேஷ் குமார் ஜெயின், செயல் இயக்குநர் ஏ.எஸ்.ராஜீவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT