தமிழகம்

ஆய்வக உதவியாளர் பணிக்கு நாளை முதல் சான்று சரிபார்ப்பு: 22 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்

செய்திப்பிரிவு

அரசு பள்ளி ஆய்வக உதவி யாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தமிழகம் முழுவதும் (சென்னை நீங்கலாக) நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கு கிறது. இதில் 22 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.

அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,632 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-ம் ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. ஏறத்தாழ 8 லட்சம் பேர் இத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவு மார்ச் 24-ம் தேதி வெளியிடப் பட்டது. ஆய்வக உதவியாளர் நியமனம் மாவட்ட அளவில் நடைபெறும். எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலியிடங் களுக்கு ஏற்ப ஒரு பதவிக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஏறத்தாழ 22 ஆயிரம் பேர் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு 9-ம் தேதி (நாளை) முதல் 11-ம் தேதி வரை அந்தந்த மாவட்டங் களில் (சென்னை தவிர) குறிப்பிட்ட மையத்தில் நடைபெறு கிறது. இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்ட விண்ணப்ப தாரர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் ஏற்கெனவே தபால் மூலம் அனுப்பப்பட்டது. சான்றிதழ் சரி பார்ப்பின்போது கல்விச் சான்றி தழ்கள், சாதிச் சான்று, பணி அனுபவச் சான்றிதழ் (இருந்தால்) ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். அந்த சான்றிதழ்களின் அடிப்படையில்தான் மதிப்பெண் வழங்கப்படும்.

இதைத்தொடர்ந்து, எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்பட்ட மதிப்பெண் அடிப் படையில் தகுதி பட்டியல் (Merit List) தயார்செய்யப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த உடன் தெரிவு பட்டியல் உடனடியாக வெளியிடப்படும். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந் தாய்வு மூலம் பணி நியமன ஆணை மாவட்ட கல்வி அதிகாரிகளால் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக, சென்னை மாவட் டத்தில் தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறையினர் தெரி வித்தனர்.

SCROLL FOR NEXT