தமிழகம்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் தீ விபத்து: பெண் பலி; 8 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே நாட்டு பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் கிராமத்தில் சக்தி ஃபயர் ஒர்க்ஸ் என்ற நாட்டு பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலை, காஞ்சிபுரம் காமாட் சியம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்த செந்தில்நாதன் பெயரில் இயங்கிவருகிறது.

இந்த தொழிற்சாலையில், ஒயிட் பவுடர் மிக்சிங் ஷெட் அருகே, மரங்களின் நிழலில் 10-க்கும் மேற்பட்டோர் தேங் காய் போன்ற உருண்டை வடிவ வெடியில் மருந்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். பிற்பகல் சுமார் 1.30 மணி அளவில், திடீரென வெடித்தது. இதில் 9 பேர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர்.அவர்கள் காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.

தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன், எஸ்.பி. செ.விஜயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து மருத்துவ மனைக்கு சென்று படுகாய மைடந்தவர்களுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து, மருத்து வர்களிடம் கேட்டறிந்தனர்.

பின்னர் மருத்துவர்கள், அதிக தீக்காயம் அடைந்த 8 பேரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும், ஒருவரை செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், வையா வூரைச் சேர்ந்த சவுந்தரி (42), மணிமொழி (40), சரஸ்வதி (29), கலா (50), மனோன்மணி (35), சுஜாதா (23), தணிகைமலை (30), காஞ்சிபுரம் டோல்கேட்டைச் சேர்ந்த பட்டாசு தொழிற்சாலையின் மேலாளர் சங்கர் (49), சர்வதீர்த்த குளம் பகுதியைச் சேர்ந்த வெங்க டேசன் (38) ஆகிய 9 பேர் படுகாயமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கேஎம்சி மருத்துவமனையில் மனோன்மணி பலியானார்.

விபத்து குறித்து போலீஸார் கூறியதாவது: சம்பவம் நடந்த பகுதியில் சுமார் 10-க்கும் மேற் பட்டோர் இருந்ததாக கூறப் படுகிறது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து, அங்கிருந்த பட்டாசுகள் சுமார் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டுள்ளன. அப்பகுதி யில் பல வெடி மருந்து அறை கள் இருந்தும், அதில் தீப்பிடிக்க வில்லை. அவர்கள் பயன் படுத்திய கூடைகள் மற்றும் உணவுப் பொருள்கள் தூக்கி வீசப்பட்டுள்ளன.

கிடங்கில் இருந்து தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வெளியில் இருந்து ஏற்பட்ட தீ, கிடங்கில் பற்றியதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT