தமிழகம்

ஜனவரி 17-ம் தேதி: எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார் சசிகலா

செய்திப்பிரிவு

எம்ஜிஆரின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனவரி 17-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து, விழா மலரை வெளியிடுகிறார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுக நிறுவன தலைவரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 100-வது பிறந்த தினம் ஜனவரி 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் துக்கு காலை 10.45 மணிக்கு, பொதுச்செயலாளர் சசிகலா வருகிறார். அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த தின சிறப்பு மலரை வெளியிடுகிறார்.

இதைத்தொடர்ந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம், ரூ.1 கோடியே 4 லட்சம் குடும்ப நல உதவியையும் வழங்குகிறார். நிகழ்ச்சியில் தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் செயலாளர்கள், தொண்டர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT