அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் உற்பத்தி 16 ஆயிரம் மெகாவாட் அதிகரிக் கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் உரை யில் கூறப்பட்டு இருப்பதாவது:
முதல்வரின் அயராத முயற்சி களாலும் தனிக் கவனத்தாலும் தமிழகத்தை இன்று மின்மிகை மாநிலமாக உருவாக்கி தமிழக வரலாற்றில் உன்னத சாதனையை தமிழக அரசு நிகழ்த்தி உள்ளது. மின் நுகர்வின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத் துத் தடைகளும் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் விலக்கப்பட்டு, தடையின்றி மன்சாரம் வழங்கப்பட்டு வரு கிறது.
சூரிய ஒளி மின்சாரம்
தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக விளங்கு வதையும், தரமான மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவதையும் இந்த அரசு உறுதி செய்யும். அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் திறனும் கொண்ட அலகுகள் (மொத்தம் 16 ஆயிரம் மெகாவாட்) கூடுதலாக நிறுவப்பட்டு தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும். தற்போது நடைபெற்று வரும் மின் திட்டங்களை விரைவாக முடித்து மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை வெகுவாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.