உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மேயர் களுக்கு மீண்டும் போட்டியிட அதிமுகவில் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது நேரடித் தேர்தல் முறையில் போட்டியிட்டு வெற்றி பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டார் அ.ஜெயா(58). எம்.ஏ. பொருளியல் முடித்துள்ளார். இவரது கணவர் எம்.எஸ்.ராஜேந்திரன், அதிமுக வழக்கறிஞர் அணி மாநகர் மாவட் டச் செயலாளர்.
மாநகராட்சி மேயராக ஜெயா இருந்த கடந்த 5 ஆண்டுகளில், “நாட்டிலேயே தூய்மையான நகரங் களில் 2-வது இடத்தையும், 2015-ல் ஸ்வாச் சர்வேக்ஷன் விருதில் தூய்மையான நகரங்களில் 3-வது இடத்தையும், 2014-ல் சிறந்த மாநக ராட்சியாக தமிழக முதல்வராலும் திருச்சி மாநகராட்சிக்கு பாராட்டு கிடைக்கப் பெற்றது. மேலும், 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தூய்மைக்கான ஸ்காட்ச் விருதும் திருச்சி மாநகராட்சிக்குக் கிடைத் தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட அ.ஜெயாவுக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
தஞ்சை சாவித்திரி கோபால்
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி யிட்டு சாவித்திரி கோபால்(47) வெற்றி பெற்றார். பின்னர் 2014-ல் தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மேயராக பொறுப்பேற்றார். பி.ஏ. படித்துள்ள இவர், அதிமுக மாவட்ட இணைச் செயலாளராக உள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளர். தற்போது இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக் கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவித்தனர். தற்போது மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், மேயர் பந்தயத் திலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
இவரது கணவர் கோபால், 1996 உள்ளாட்சித் தேர்தல் நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
சேலம் எஸ்.சவுண்டப்பன்
சேலம் மாநகராட்சி 56-வது கோட்டத்துக்கு உட்பட்ட களரம்பட்டி யில் வசித்து வருபவர் அதிமுக மேயர் எஸ்.சவுண்டப்பன்(70). இவர் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அதிமுகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த 2001-ம் ஆண்டு 56-வது கோட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு துணை மேயர் பதவி அளிக்கப்பட்டது.
2006 சட்டப்பேரவைத் தேர்த லில் போட்டியிட வேண்டி, அப் போதைய அதிமுக மேயர் சுரேஷ்குமார், பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, துணை மேயர் சவுண்டப்பன் (பொறுப்பு) மேயராக பதவி வகித்து மாமன்றக் கூட்டத்தை நடத்தி வந்தார். 2006-ல் 56-வது கோட்டம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து, சவுண்டப்பனின் மனைவி சீதாதேவி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது, 2011 முதல் 2016 வரை மேயர் பொறுப்பில் சவுண்டப்பன் பதவி வகித்துவரும் நிலையில், மீண்டும் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் மேயராக பொறுப்பு வகிப்ப தற்கு முன்பு சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கச் செயலாள ராக இருந்தார். அதிமுக தொகுதி செயலாளர் பதவி உருவாக்கிய போது, சேலம் தெற்கு தொகுதிச் செயலாளராக இருந்தார்.