சட்டப்பேரவையில் நேற்று திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்) கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
சென்னை வால்டாக்ஸ் சாலை, ராஜா முத்தையா சாலை ஆகிய வற்றை இணைக்கும் யானைக் கவுனி பாலச் சாலையில் அமைந் துள்ள யானைக்கவுனி பாலம் ரயில்வே துறையை சார்ந்ததாகும். இப்பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகு சாலைகள் மட்டுமே சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இப்பாலம் பழுதடைந் துள்ளதால் கனரக, இலகுரக வாக னங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறை மூலம் இப்பாலத்தின் கீழே தற்காலிகமாக இரும்புத் தூண்கள் நிறுத்தப்பட்டு பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பேசின் சாலை, ராஜா முத்தையா சாலை, ஈ.வெ.ரா. பெரியார் சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கீழே கூடுதல் இருப்புப் பாதைகளை அமைக்க பாலத்தை 47 மீட்டரிலிருந்து 150 மீட்டராக அதிகரிக்க ரயில்வே உத்தேசித்துள்ளது. இப்பாலத்தை இடித்து விட்டு ரயில்வே துறையும், சென்னை மாநகராட்சியும் இணைந்து 50:50 நிதிப் பங்கீட்டில் புதிய மேம்பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்புப் பணிகள் தயாராகி வருவதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையிடமிருந்து விரி வான திட்ட அறிக்கை பெறப்பட்ட பிறகு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அணுகு சாலைப் பகுதிக் கான விரிவான திட்ட அறிக்கை தயா ரிக்க நடவடிக்கை எடுக்கப் படும்.