டெல்லியில் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களின் கோரிக் கைகளை எடுத்துரைப்பதாக வணிகர் சங்க பிரதிநிகளிடம் நிதிமைச்சர் ஜெயக்குமார் உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை யில் வணிகர் சங்க பிரதிநிதிகள் தலைமை செயலகத்தில் நேற்று தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக் குமாரை சந்தித்து பேசினர். அப் போது ஜிஎஸ்டி சட்ட வரி விகிதங் களால் பொதுமக்கள், வணிகர் களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.
இதுதொடர்பாக நிதியமைச்சரி டம் அவர்கள் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது: பொதுமக் களின் அன்றாட வாழ்க்கையை சிதைக்கும் வகையிலும், வணிகர்களின் கோரிக்கைகளை புறக்கணிக்கும் வகையிலும் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் அமைந் துள்ளன. எனவே, தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி சட்டத்தை ஏற்றுக்கொள்ள இயலாது.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல் படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்தபோது அந்த சட்டம் குறித்து வணிகர்களிடம் ஆலோ சனை பெறுவதற்காக ஒரு உயர் மட்டக்குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசிடம் வேண்டு கோள் விடுத்திருந்தோம். அதைத் தொடர்ந்து, கடந்த 2015 நவம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணைப்படி ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அந்த உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறவில்லை.
மேலும், ஜிஎஸ்டி சட்டம் குறித்து மத்திய, மாநில அரசுகள் இதுவரை வணிகப் பிரதிநிகளோடு எந்தவித ஆலோசனை கூட்டத்தையும் நடத்தவில்லை. எனவே, தமிழக அரசு, மத்திய அரசு அதிகாரிகள், தமிழக வணிகப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தை கூட்ட ஏற்பாடு செய்து உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட நிதியமைச்சர் ஜெயக் குமார், டெல்லியில் வரும் ஜூன் 3-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வணிகர்களின் கோரிக்கைகளை எடுத்துரைப்பதாக வணிகர் சங்க பிரதிநிகளிடம் உறுதியளித்தார்.