கல்லாறு உட்பட 4 ஆறுகளில் ரூ.33 கோடியில் புதிய அணைக் கட்டுகள் கட்டப்படும் என்று அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசிய தாவது:
காவிரி வடிநில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பாசன அமைப்பு களை மேம்படுத்துவதற்கான முதல்நிலை திட்டக் கருத்துரு ரூ.11,240 கோடி மதிப்பில் தயா ரிக்கப்பட்டு, மத்திய நீர்க்குழு மத்திடம் கொள்கை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.2,298 கோடியில் கல்லணை கால்வாய் மேம்பாட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதல் பெறும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் 25 மாவட்டங்களில் 684 மரபு சார்ந்த நீர்நிலைகள் ரூ.198 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளன. 27 மாவட்டங்களில் ரூ.991.55 கோடி யில் 67 அணை, 12 நீர் ஒழுங்கி கள், 39 கால்வாய்கள், 531 ஏரிகள் புனரமைக்கப்பட்டன. அரியலூர், சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர், மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,478.30 கோடி யில் வெள்ளத்தடுப்பு பணிகள் செயல்படுத்தப்படடன.
மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்க தேசிய நீர் மேம்பாட்டு முகமை ஒரு சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்துள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்துக்கு கூடுதலாக 100 டிஎம்சி தண்ணீர் அளிக்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் செய்யாற்றிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கல் லாற்றிலும், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பாலாற்றிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொழுவனாற்றிலும் ரூ.33 கோடி யில் ஏரிகளின் வரத்துக்கால் வாய்களில் தேவையான நீரை திருப்பும் வகையில் புதிய அணைக்கட்டுகள் கட்டப்படும்.
கொசஸ்தலையாறு, குடக னாறு, விளாங்குடி ஓடை, நல்லாறு, உப்பாறு, வேதபுரியாறு, நம்பியாறு மற்றும் மலட்டாறு, முக்தா ஆறுகளில் ரூ.31 கோடியில் தடுப்பணைகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் கட்டப் படும்.
திண்டுக்கல் மாவட்டம் பாலாற் றின் குறுக்கில் ரூ.1 கோடியில் தரைப்பாலம் கட்டப்படும். விளவங்கோடு வட்டம் ரவிபுத்தன் துறையில் ரூ.3 கோடியில் கடலரிப்பு தடுப்புச்சுவர் சீரமைக் கப்படும். ஈரோடு, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் புதிய பாசன திட்டங்களுக்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.