அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட் டோக்கள் குறித்து கடந்த 4 நாட்களாக போக்குவரத்துத்துறை மற்றும் போலீஸார் நடத்திய ஆய்வில் இதுவரையில் 900 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; 300 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் ஆணையரக அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆட்டோக்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூல், விதிமுறைகள் மீறல், ஆவணங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை போக்குவரத்து மற்றும் போலீஸார் இணைந்து நடத்தி வருகிறோம்.
விதிமுறை மீறல், அதிக கட்டணம் வசூல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ரூ.100 முதல் ரூ.2,500 வரை அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 நாட்களில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதுவரையில் 900 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 300 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.