இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையால் கிராமப் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் வடசென்னை மாவட்ட கிளை சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற சி.மகேந்திரன் பேசியதாவது:
உலக அளவில் மாட்டு இறைச்சியின் தேவையில் 20 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. இது உலக இறைச்சி வர்த்தக நிறுவனங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அந்நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையிலேயே, மத்திய அரசு இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
மொத்தத்தில் மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தத்தால், கிராம பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு இந்தத் தடையை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.