தமிழகம்

தமிழக வனத்துறைக்குச் சொந்தமான வேட்டை தடுப்பு முகாம் மீது சொந்தம் கொண்டாடும் கேரளம்: புதிதாக கிளம்பிய சர்ச்சை

ஆர்.செளந்தர்

கம்பம்மெட்டில் அமைக்கப்பட் டுள்ள தமிழக வனத்துறை வேட்டை தடுப்பு முகாம் கேரள எல்லைக்குள் இருப்பதாக அம்மாநில வருவாய் துறையினர் புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளனர்.

தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள கம்பம்மெட்டில் கேரள கலால் துறையினர் சோதனை சாவடி அமைக்க கடந்த 3 மாதங் களுக்கு முன்பு கண்டெய்னர் வைத்தனர். தமிழக எல்லைக் குள் இருப்பதாக கம்பம் வனத் துறையினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்த இடம் கேரளத்துக்கு சொந்தமானது என அம்மாநில வருவாய் துறையினர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் கண்டெய்னர் அகற்றப்பட்டதோடு, பிரச்சினைக் குரிய இடத்தை அளந்து எல் லைக் கல் ஊன்ற இரு மாநில வருவாய் துறையினரும் முடிவு செய்து கடந்த வாரம் கூட்டாய்வு மேற்கொண்டு அளவீடு செய்தனர். அப்போது தமிழக எல்லைக்குள் கேரள வனத்துறை, காவல்துறை சோதனைச்சாவடிகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அம் மாநிலத்தை சேர்ந்த மக்கள் சிலர் தமிழக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதும் கண்டறியப்பட்டது. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சட்டம்- ஒழுங்கு பிரச் சினை ஏற்படக் கூடும். என கருதி தமிழக அதிகாரிகள் மவுனமாக இருந்துவிட்டனர். இந்நிலையில் வனவிலங்குகள் வேட்டையாடு வதைக் கண்டறிய கம்பம்மெட்டில் அணைக்கரை என்ற இடத்தில் தமிழக வனத்துறையினர் வேட்டை தடுப்பு முகாம் அமைத்திருந்தனர். இக்கட்டிடம் கேரள எல்லைக்குள் இருப்பதாக நேற்றுமுன்தினம் கேரள வருவாய் துறையினர் புது பிரச்சினையை கிளப்பியுள்ளனர். இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கம்பம் விவசாயிகள் சிலர் கூறியது: கம்பம்மெட்டில் தமிழகம், கேரளத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் தங்கள் பட்டா நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த சிலர் எல்லை கற்களை அகற்றிவிட்டு தமிழக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களை தமிழக வனத்துறையினர் அப்புறப் படுத்தக் கூடாது என்பதற்காக வேட்டை தடுப்பு முகாம் அவர்கள் எல்லைக்குள் இருப்பதாக அம்மாநில வருவாய் துறையினர் புதிய பிரச்சினையை கிளப்பி உள்ளனர் என்றனர்.

இதுதொடர்பாக தேனி மாவட்ட உதவி வன அலுவலர் விஜய குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தமிழகம் மற்றும் கேரளத் தில் உள்ள ஆவணங்கள் ஒன்றாக உள்ளன. வேட்டை தடுப்பு முகாம் கேரள எல்லைக் குள் கட்டப்பட்டுள்ளதாக கம்பம் மெட்டுவை சேர்ந்த கேரள விவ சாயி ஒருவர் அம்மாநில வரு வாய் துறையினரிடம் புகார் கொடுத் துள்ளார்.

ஆனால் அந்த கட்டிடம் கடந்த 2013-14-ம் ஆண்டு கட்டப் பட்டது. தமிழக ஆவணங்களில் நமது எல்லைக்குள் இருப்பதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அங்கு தற்போது வரை வனத்துறையினர் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை கற்களை யாராவது எடுத்து வேறு இடத்தில் ஊன்றி இருக்க வாய்ப்புள்ளது. அதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இரு மாநில அதிகாரிகள் முன்னிலையில் நிலஅளவீடு செய்து எல்லை கற்கள் ஊன்ற உள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT