நுரையீரலில் நோய்த் தொற்று இருந்தால் ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. தொடர்ந்து சளி தொல்லை, மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவை ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதற்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் அவை ஆஸ்துமா நோயை ஏற் படுத்தி விடும்.
கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர் ச்சி, பரபரப்பு, மனக்குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகளும் ஆஸ்துமாவை வரவழைக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் பற்றிய விழிப் புணர்வு ஏற்படுத்த உலக ஆஸ்துமா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே முதல் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மே 2-ம் தேதி வருகிறது. இந்த தினத்தையொட்டி மதுரையை சேர்ந்த நுரையீரல் மருத்துவ நிபுணர் எம்.பழனியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
உலகம் முழுவதும் 30 கோடி மக்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 சதவீதம் நோயாளிகள் இந்தி யாவில் உள்ளனர். இவர்களில் 7.5 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது, அதனை சுவாசிப்பவர்கள், சில இடங்களின் சீதோஷ்ண நிலை போன்றவை ஆஸ்துமா நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை, போக்குவரத்து மற்றும் நோய் அறிகுறிகள் ஏற்பட்டபின் தொடக்கம் முதல் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. ஆஸ் துமா நோய்க்காக ஆங்கில மருத்துவத்தை தொடர்ந்தவர்கள், அந்த சிகிச்சையைக் கைவிட்டு திடீரென்று மாற்று மருத்துவத்தை நாடிச் செல்வதும் அந்நோயை கட்டுப்படுத்த முடியாமல் போ கிறது. சுற்றுச்சூழலை பாது காப்பது, முறையான மூச்சுப் பயிற்சி, சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்றினால் இந்நோயைத் தவி ர்க்கலாம்.
உடல் பருமன் அதிகரிப்பால் 8.8 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா நோய் வருகிறது. பெரிய வர்கள் புகைப்பிடிப்பதால் குழந் தைகளுக்கும், எதிரே முகத் தில் புகையை எதிர்கொள்வர் களுக்கும் ஆஸ்துமா பரவுகிறது.
கார், கழிப்பிட அறையில் அமர்ந்து கொண்டு புகைபிடிப் பதால் புகை காற்றில் படிந்து அப்படியே அந்த அறையில் நிற்கும். அதன்பிறகு அந்த அறைகளில் நுழைவோர் அந்த புகையை காற்றுடன் சேர்ந்து சுவாசிக்கும்போது அவர்களுக்கும் ஆஸ்துமா வருகிறது. இந்த விதத்தில் குழந்தைகளுக்கு அதி களவில் ஆஸ்துமா பரவுகிறது. அதனால், புகைப்பிடிப்பதை கண் டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு ஆரம்பத்திலே இந்த நோயை கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது கட்டாயம். இழுப்பு இருந்தால் மட்டுமே ஆஸ்துமா இருக்கும் என நினை ப்பது தவறு. இழுப்பு இல்லாமலே ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.