தமிழகம்

இன்று ரம்ஜான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பிறை தெரிந்ததால் தமிழகத்தில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு ரம்ஜான் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் தொடங்கியது. இந்நிலையில், “தமிழகத்தில் பல மாவட்டங்களில் பிறை தெரிந்ததால் இன்று (ஜூன் 26) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்” என தமிழக தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று அறிவித்தார்.

SCROLL FOR NEXT