செங்குன்றம் அருகே தனியார் சேமிப்பு கிடங்கில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 400 கிலோ செம்மரக் கட்டைகளை ஆந்திர போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி புறநகர் யேப்பேடு காவல் நிலை யத்தில் பதிவு செய்யப்பட்ட செம்மரக் கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த திருவள்ளூர் மாவட்டம், திருவெற்றியூரைச் சேர்ந்த செந்தில் என்பவரை, சமீபத் தில் ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில்,செங்குன்றம் பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து, நேற்று ரேணிகுண்டா காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரரெட்டி தலைமையிலான போலீஸார், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர், ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குக்கு வந்தனர்.
அங்கு, செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் சுரேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலக ஊழியர் முன்னிலையில், ஆந்திர போலீஸார் சேமிப்பு கிடங்கின் பூட்டை உடைத்து, சோதனை செய்தனர்.
அச்சோதனையில், சம்பந்தப் பட்ட சேமிப்பு கிடங்கில் 400 கிலோ எடைக் கொண்ட 10 செம் மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப் பட்டு இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செம்மரக்க கட்டைகளை தேடும் பணியை ஆந்திர போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த வாரம் இதே போல் செங்குன்றம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக் கட்டைகளை போலீஸார் நேரடியாக சோதனை செய்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.