தமிழகத்தில் கடுமையான வறட்சி யின் கொடுமையால் குடிநீர், இரை கிடைக்காமல் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் கால்நடைகளும், வன விலங்குகளும் தொடர்ந்து பலியாகி வருகின்றன.
தமிழகத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. ஒகேனக்கல்லில் காவிரி ஆறும், அருவியும் வரலாற்றில் கண்டிராத வகையில் வறண்டு பாறைகளாகக் காட்சியளிக்கின்றன. காவிரி ஆற்றை நம்பி இருந்த கால்நடைகளும், வன விலங்கு களும் குடிநீர், இரை கிடைக்காமல் தொடர்ந்து உயிரிழப்பை தழுவி வருகின்றன.
இதுபற்றி பென்னாகரம் பகுதி யைச் சேர்ந்த விவசாயி கோவிந்த சாமி கூறியதாவது: கடந்த காலங் களிலும் தருமபுரி மாவட்டத்தில் அவ்வப்போது வறட்சி ஏற்பட்டுள் ளது. இதுபோன்ற வறட்சி காலங் களில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தங்கள் கால்நடைகளை ஒகேனக்கல் பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வார்கள். காவிரி ஆறு ஓடுவ தால் ஆற்றோரத்திலும், ஆற்றை ஒட்டிய வனப்பகுதிகளிலும் கால் நடைகளுக்கு தீவனம், தண்ணீர் கிடைத்துவிடும். தீவனத்தை உட் கொண்டு, ஆற்றில் குறைந்த அள வில் ஓடும் காவிரி நீரைப் பருகி கால்நடைகள் பசியாறிக்கொள் ளும். இதுபோன்ற வறட்சி நேரத் தில், இவ்வாறு குறைந்தபட்ச தீவ னம்தான் கிடைக்கும் என்றாலும் ஆற்று நீரைப் பருகி கால்நடைகள் ஓரிரு மாதங்களுக்கு உயிரைக் காப் பாற்றிக்கொள்ளும். நடப்பு ஆண் டில் காவிரி ஆறு வறண்டு கிடக் கும் நிலையில் ஆற்றை ஒட்டியும், வனப்பகுதியிலும் கால்நடை களுக்கு தீவனம் எதுவும் கிடைக்க வில்லை.
இந்நிலையில், சுற்றுலாப் பயணி கள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் பை களில் உள்ள உணவுப் பொருள் மிச்சங்களின் வாசனை மற்றும் சுவை யால் ஈர்க்கப்பட்டு கால்நடைகள் அவற்றை உட்கொள்கின்றன. பிளாஸ்டிக் பைகளை உண்ணும் கால்நடைகள் விரைவில் இறந்து விடுகின்றன. ஒகேனக்கல் சுற்று வட்டாரத்தில் வனப்பகுதியிலும், வனத்தை ஒட்டியும் இதுபோன்று ஆங்காங்கே கால்நடைகள் இறந்து கிடக்கின்றன. இறந்து எலும்புக் கூடாகக் கிடக்கும் கால்நடைகளின் வயிற்றில் செரிமானம் ஆகாமல் உருண்டையாக பாலித்தீன் பைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதுதவிர, வனத்தை ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் குரங்கு களும் இதேபோன்று பாலித்தீன் பைகளை உண்டதால் உயிரிழந்து கிடக்கின்றன. வனப்பகுதிகளில் தண்ணீர், இரை தேடி யானைகளும் பரிதாபமாக அலைந்து திரிகின்றன. கால்நடைகள், வன விலங்குகளின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்க்க அரசுத் தரப்பில் போதிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற வறட்சி நிலைக்கு தமிழகம் ஆளாகாத அள வுக்கு பசுமைப் பரப்பை அதிக ரித்து மழைப்பொழிவை தக்க வைப் பதையும் பிரதான பணியாக அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.