தமிழகம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே டாஸ்மாக் கடை சூறை; பெண்கள் போர்க்கோலம்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அன்னதானம் பேட்டை கிராமத்தில் பெண்கள் திடீரென டாஸ்மாக் கடையில் புகுந்து மது பாட்டில்களை உடைத்தனர். மேலும், சாலை மறிய லில் ஈடுபட்டு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று போராட் டத்தில் ஈடுபட்டனர்.

குறிஞ்சிப்பாடி அருகே அன்ன தானம்பேட்டையில் உள்ள டாஸ் மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பெண் கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டமாக சென்று திடீரென டாஸ்மாக் கடைக் குள் புகுந்து, அங்கு இருந்த மது பாட்டில்களை வெளியே தூக்கிப் போட்டு உடைத்தனர்.

டாஸ்மாக் மதுபானக் கடையை உடனே அகற்ற வேண்டும் என்று கோரி குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுடன் இணைந்து பொதுமக்களும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சி ராணி மற்றும் வடலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். போராட் டத்தில் ஈடுபட்ட பெண்கள், “எங்கள் பகுதியில் இருந்து டாஸ் மாக் கடையை உடனே அகற்றினால்தான் சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம்” என்று தெரிவித்தனர்.

வரும் 20-ம் தேதிக்குள் கடையை அகற்றி விடுவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட் டத்தினால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி நடைபெற்ற சாலை மறியல் போராட்டம்.

SCROLL FOR NEXT