தமிழகம்

மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம்: செப்.30-க்குள் முழுமையாக இடிக்கப்படும் - உயர் நீதிமன்றத்தில் சிஎம்டிஏ தகவல்

செய்திப்பிரிவு

சென்னையை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில் 11 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் படுகாயமடைந்தனர்.

இதேபோல் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகில் உள்ள மற்றொரு அடுக்கு மாடி கட்டிடத்தை இடிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையி்ல் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியை சிஎம்டிஏ கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு வந்தது. சிஎம்டிஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா சீனிவாசன், ‘‘ மவுலிவாக்கத்தில் உள்ள கட்டிடத்தை இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வெடிபொருட்களை பொருத்தும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இம்மாத இறுதிக்குள் கட்டிடம் முழுமையாக இடிக்கப் படும்’’ என்றார்.

அதையேற்ற நீதிபதிகள், மவுலி வாக்கத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தை வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிஎம்டிஏ-விற்கு உத் தரவிட்டு விசாரணையை நவ.4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

SCROLL FOR NEXT