தமிழகம்

சென்னைக்கு பலத்த பாதுகாப்புடன் கன்டெய்னரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.700 கோடி

செய்திப்பிரிவு

கோவையில் இருந்து சென் னைக்கு ரூ.700 கோடி வங்கி பணம் கன்டெய்னர் லாரிகளில் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

கோவையில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎப்சி, சிட்டி யூனியன் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி என 5 வங்கிகளுக்கு சொந்தமான பழைய, கிழிந்த ரூ.700 கோடி ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு 3 கன்டெய்னர் லாரிகளில் அனுப்பப்பட்டன. இந்த லாரிகள் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் வந்தன.

இந்த லாரியுடன் உதவி ஆணையர் ராஜு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் உள்ளிட்ட 17 போலீஸார் பாதுகாப்புக்கு உடன் வந்தனர். இரவு நேரத்தில் சென்னைக்கு கொண்டு செல்வது பாதுகாப்பாக இருக்காது என கருதிய விழுப்புரம் எஸ்பி நரேந் திர நாயர், ஆயுதப்படை மைதா னத்தில் லாரிகளை நிறுத்த உத்தர விட்டார். இதையடுத்து 3 லாரிகளும் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தப்பட்டன. நள்ளிரவு 12.30 மணிக்கு எஸ்பி நரேந்திர நாயர் பாதுக்காப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நேற்று காலை 5.30 மணிக்கு 3 லாரிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றன.

SCROLL FOR NEXT