தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சனிக்கிழமை (நவ.30) முதல் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குனர் ரமணன் கூறும்போது, "தற்போது வறண்ட வானிலை இருந்தாலும், வரும் சனிக்கிழமை முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது என்று கணினி சார்ந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இது கண்டிப்பாக இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும். எவ்வளவு மழை பெய்யும் என்பது அடுத்த 24 மணி நேரத்துக்கு மேல் தெரிய வரும்" என்றார் ரமணன்.
இந்தத் தொடர் மழை தமிழகத்தின் மழை குறைப்பாட்டை ஓரளவு சரி செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யாவிட்டாலும் கடலோர மாவட்டங்களில் மழை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.