தமிழகம்

ஆண்டிபட்டி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்: காளைகளுக்கு தீவிர பயிற்சி

செய்திப்பிரிவு

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு காளைகளுக்கு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆண்டுதோறும் தைப்பொங்கலை முன்னிட்டு ஆண்டிபட்டி, கூடலூர், அய்யம்பட்டி ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்த தையடுத்து கடந்த 3 ஆண்டு களாக ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா ரேஸ் நடக்க வில்லை. ஆனால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த ஆண்டிபட்டி பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஏத்தக்கோவில் கிராம மக்கள் சிலர் கூறியதாவது: ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள பாலக்கோம்பை, குன்னூர், திம்மரச நாயக்கனூர், ஏத்தக்கோவில் உள்ளிட்ட 7 கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகின் றன. உச்ச நீதிமன்றத் தடை காரண மாக பலர், தாங்கள் ஆசையாக வளர்த்து வந்த காளைகளை கேரளாவுக்கு அடிமாடாக விற்பனை செய்து விட்டனர்.இன்னும் சிலர் நீதிமன்றத் தடை விலகும் என்ற நம்பிக்கையில் காளைகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆண்டு தடை நீக்கப்படும் என்று நம்புகிறோம்.

ஆனால் தடை நீக்கப்படாத பட்சத்தில், தடையை மீறி ஜல்லிக் கட்டு நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஆங்காங்கே கிராம மக்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருவதோடு, காளைகளுக்கு நீச்சல் மற்றும் மணல்மேட்டில் முட் டும் பயிற்சி அளித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT