தமிழகம்

கொளுத்தும் வெயிலால் பிரச்சாரம் செல்ல தயங்கும் வேட்பாளர்கள்

பி.டி.ரவிச்சந்திரன்

வெயிலின் கடுமை காரணமாக வேட்பாளர்கள் பிரச்சார நேரத்தை குறைத்துக் கொண்டுள்ளனர். வாக்குப்பதிவுக்கு முன் வெயில் குறைய வாய்ப்பில்லாததால் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக் கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில், வேட்பாளர் கள் அறிவிப்புக்கு பின்னரும் பிரச்சாரம் களை கட்டவில்லை. அனைத்து கட்சிகளிலும் வேட்பா ளர்கள் மாற்றப்படுவது ஒரு காரண மாக இருந்தாலும் வெயிலின் தாக் கம் அதிகரித்துள்ளதும் மற்றொரு காரணமாகக் கூறப்படுகிறது.

காலை 7 மணிக்கு திறந்த வேனில் பிரச்சாரத்தை தொடங்கும் வேட்பாளர்கள் காலை 10 மணிக்குள் முடித்துவிடுகின்றனர். அதன்பிறகு வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் மாலை 4 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்கி இரவு 10 மணி வரை வாக்கு கேட்கின்றனர்.

வெயிலை பொறுத்துக் கொண்டு பகலில் சென்றாலும் பொதுமக்கள் வெளியே தலைகாட்டுவதில்லை என்பதால், அதிக முயற்சி எடுக்கவும் வேட்பாளர்கள் விரும்பவில்லை. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இடைப்பட்ட நேரத்தில் பிரச்சாரத்துக்கு யாரும் செல்வதில்லை.

அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கும். அதற்குள் தேர்தலே முடிந்துவிடும். மொத்தத்தில் வாக்காளர்களை கண்டு பயப்படும் நிலை ஒருபுறமிருக்க, கொளுத்தும் வெயிலும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT