அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலர் களுக்கு போனஸ், சிறப்பு போனஸ், பொங்கல் பரிசு ஆகிய வற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.3 ஆயிரம் வரை கிடைக்கும்.
போக்குவரத்து ஊழியர்கள் உட்பட தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்று பவர்களுக்கு தீபாவளி பண்டிகை யின்போது போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப் படுகிறது. அதேபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூ தியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர் களுக்கு ஆண்டுதோறும் பொங் கலை முன்னிட்டு, அவர்கள் பணி யாற்றும் நிலை மற்றும் ஊதிய விகித அடிப்படையில் போனஸ் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் பொங்கலையொட்டி அரசு ஊழியருக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெய லலிதா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகளில் பணி யாற்றுபவர்கள் மட்டுமே போனஸ் பெற்று வந்த நிலையை மாற்றி, முதன்முதலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் பொங்கலை முன்னிட்டு கருணைத் தொகை வழங்கும் நடைமுறையை முன் னாள் முதல்வர் எம்ஜிஆர் அறி முகப்படுத்தினார். தற்போதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இன்றியமையாத பணியை கருத்தில் கொண்டு, அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்யும் வகையில், பல்வேறு சலுகைகளை தமிழக அரசு அளித்து வருகிறது.அந்த வகையில் பொங்கல் பண்டி கையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு போனஸ், சிறப்பு போனஸும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசும் வழங்கப்படும்.
கடந்த 2014 - 15 நிதியாண்டுக்கு சி, டி பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உச்சவரம்புக்குட்பட்டு 30 நாள் ஊதியத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும்.
ஏ, பி பிரிவைச் சேர்ந்த அலுவலர் கள், ஆசிரியர்கள் மற்றும் நிதி யாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள், அதற்குமேல் பணியாற்றி சில்லறை செலவினத்தின்கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர, பகுதி நேர பணியாளர்கள், தொகுப் பூதியம் பெறுவோர், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சத் துணவு திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் அங்கன் வாடி பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு போனஸாக வழங் கப்படும்.
மேலும் கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணியாற்றும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணி யாளர்கள், ஒப்பந்த அடிப்படை யிலான தற்காலிக உதவியாளர் கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுவோர், ஒரு பகுதி தினக்கூலிகளாக பணியாற்றி அதன் பின் பணி நிரந்தரம் செய்யப்பட்ட வர்களுக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங் களில் பணியாற்றும் அலுவலர் கள், ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக்குழு, தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பளம் பெறுபவர்கள், அனைத்திந்திய பணி விதி முறைகள்கீழ் சம்பளம் பெறுபவர் களுக்கும் போனஸ், சிறப்பு போனஸ் வழங்கப்படும்.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன் னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு ரூ.326 கோடியே 85 லட்சம் செலவு ஏற்படும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.
சமீபத்திய மழை வெள்ளத்தின் போது பல்வேறு அரசுத் துறை அலுவலர்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டன. அந்த நிலை யிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது, நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இந்நிலையில், தங்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித் திருப்பதை அரசு ஊழியர்கள் வரவேற்றுள்ளனர்.
இது தொடர்பாக, தலைமைச் செயலக சங்க தலைவர் கணேசன் கூறும்போது, ‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ரூ.326 கோடியே 85 லட்சத்தை பொங்கல் போனசாக அறிவித்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.