இந்திய நீதித்துறையின் எதிர்காலம் பெண்கள் கையில் உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் மற்றும் என்.நடராஜன் அறக்கட்டளை சார்பில் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 2-ம் ஆண்டு மாதிரி நீதிமன்றப் போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றிபெற் றோருக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாகத் தில் நேற்று நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பங்கேற்று, போட்டியில் முதலிடம் பிடித்த தஞ்சாவூர் சாஸ்த்ரா சட்டக் கல்லூரி மாணவர் களுக்கும், 2-ம் இடம் பிடித்த தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கும் சுழற்கோப்பைகளையும், பரிசு களையும் வழங்கினார். இந்நிகழ்ச் சியில் அவர் பேசியதாவது:
சட்டப் படிப்புக்கென்று தனிச் சிறப்பு இருப்பதால், தற்போது பெருநிறுவனங்கள் தொழில் மேலாண்மை பட்டதாரிகளுக்கு பதிலாக சட்டம் படித்தவர்களைத் தான் பணியில் அமர்த்துகின்றனர். அதனால் குறுகிய காலத்தில் பொரு ளீட்ட பெருநிறுவன பணிக்கு செல் வதா, அல்லது ஏழை மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தர நீதிமன்றங் களை நோக்கி வருவதா என்பதை சட்ட மாணவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போது இந்திய அளவில் நீதித்துறையில் 50 சதவீதம் பெண் கள் உள்ளனர். உச்ச நீதிமன்றத் துக்கு திறமையான, ஆற்றல் மிகுந்த பெண் நீதிபதி பானுமதியை தமிழகம் வழங்கியுள்ளது. அண்மைக் கால மாக சட்டம் படிப்போரில் 70 சத வீதம் பேர் பெண்களாக உள்ளனர். நீதிபதிகளுக்கான போட்டித் தேர்வு களிலும் அதிக அளவில் பெண் கள்தான் வெற்றிபெறுகின்றனர். அடுத்த 15 ஆண்டுகளில் நீதித்துறை யில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். அதனால் நீதித்துறையின் எதிர்காலம் பெண்கள் கையில் தான் உள்ளது.
இவ்வாறு நீதிபதி குரியன் ஜோசப் பேசினார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பேசும்போது, “இதுபோன்ற மாதிரி போட்டிகளால் தமிழக நீதித்துறைக்கு திறமையான வழக் கறிஞர்கள் கிடைக்க வாய்ப்புள் ளது. சட்ட மாணவர்கள், ஓய்வு நேரங்களில் நீதிமன்றங்களுக்கு வந்து, வழக்கு விசாரணைகளை யும், மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களையும் கவனித்து, அதன் மூலம் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வழக்கறிஞர்கள் மேற்கத்திய நாடுகளைப் போன்று வாதங்களை சுருக்கமாக வைக்க வேண்டும். வழக் கறிஞர்கள் தங்கள் திறமையை பெருநிறுவனங்களுக்காக செல விடுவதற்கு பதிலாக, மக்களுக்காக வாதிட முன்வர வேண்டும். அவ் வாறு செய்வதன் மூலம் வருவாய் இழப்பு ஏற்படுவது போன்று தோன் றலாம். அது நிலையானது இல்லை” என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், அட்வகேட் ஜெனரல் ஆர்.முத்துகுமாரசாமி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.சண்முகசுந்தரம், செயலாளர் எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.